தமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்!

தமிழின அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் உணர்வெளுச்சியுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாட்டீன் வீதியில் அமைந்துள்ளயாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்யாழ்.மாவட்ட இளைஞர் அணித் தலைவர் க.பிருந்தாபன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில், உயிரிழந்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முதன்மைச் சுடரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சோ.சேனாதிராசா ஏற்றினார்.

தொடர்ந்து மத ஆராதனைகள் இடம்பெற்று, அஞ்சலி உரையை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா நிகழ்த்தினார்.

உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்ட இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், நகர சபைகள், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து உயிர் நீத்த எம் சொந்தங்களை நெஞ்சினில் நிறுத்தி அஞ்சலித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்