அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(18) மாலை உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க.பேரின்பராசா, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ஆலய தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அதிகளவானவர்கள் பங்கேற்றனர்.

ஆலய தலைவர் க.கிருஸ்ணமூர்த்தியின் தலைமையில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்களினால் நடாத்தப்பட்ட பூஜை வழிபாடுகளில் இறந்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டிய பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.

நினைவுச்சுடரினை ஏந்திய பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் ஆலயத்தை வலம் வந்ததுடன் ஆலய வெளி வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவு பதாதைக்கு முன்பாக ஒன்றிணைந்து அங்கிருந்த பொதுச்சுடரினையும் எற்றி வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் உரையாற்றும் போது பல்வேறு விடயங்களை குறிப்பிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ….தமிழர் பிரச்சினையை சர்வதேசம் தீர்த்து வைக்கும் என நம்புவதாக கூறினார். நாட்டில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கும் அரசியல் தீர்வு அவசியம்.

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில்…. தந்தை செல்வா சொன்னது போன்று கடவுள்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்…..

திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன்… சர்வதேசம் இன்று தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்காது பாராமுகமாக செயற்படுகின்றது….

 

 

 

 

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்