கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவுகூரல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் குறித்த நிகழ்வுநேற்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் ஆரம்பமாகியது.

இதன்போது நினைவுநாள் பொதுச்சுடர் இறுதி யுத்தத்தினால் உறவுகளை இழந்த ஒருவரால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்க்ள, உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வையடுத்து பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்