கிராமசக்தி செயற்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பொத்துவில் பிரதேச கிராம மக்களுக்கான சுயதொழில் கடன்கள் வழங்கி வைப்பு.

நாடுபூராகவும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் சிந்தனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் கிராம சக்தி செயல் திட்டமானது அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செயற்பட்ட கிராம சக்தி அங்கத்தவர்களுக்கு சுயதொழில் முயற்சியாளர்களுக்காக கடன்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை (17) பொத்துவில் பிரதேச செயலாளர் இ.திரவியராஜ் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றிருந்தன.

இதன்போது பொத்துவில் பிரதேசத்தில் சர்வோதயபுரம், செங்காகமம், கோமாரி-01 ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராம சக்தி சுயதொழில் முயற்சியாளர்கள் 37 பேருக்கு சுயதொழில் கடன்கள் பிரதேச செயலாளர் இ.திரவியராஜ் அவர்களினால் வைபவ ரீதியாக கடன்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் 15000 ரூபா படி தலா 23பேருக்கும் 25000ரூபா படி 14பேருக்குமாக 11இலட்சத்தி 50ஆயிரம் ரூபா கடன்கள் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் இ.திரவியராஜ், விடயத்திற்கு பொறுப்பான அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.ஜெயச்சந்திரன், கிராம மட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவைகள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்