கஞ்சி உண்டு தமிழினம் பட்ட துயரங்கள் அம்பாறையில் நினைவுகூரப்பட்டது.

ஒரு வேளை உணவுகூட இல்லாமல் முள்ளிவாய்க்காலில் பட்ட துயரங்களை எண்ணி நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கல்முனைத்தொகுதி தமிழரசுக்கட்சி தலைவருமாகிய மு.இராஜேஸ்வரன் தலைமையில் கஞ்சி உண்டு தமிழினப்படுகொலையை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய இராஜேஸ்வரன் அவர்கள்..

மே 18 தமிழினப்படுகொலை நாள் தமிழரின் வீரம் முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்து ஈழத்தமிழரின் செங்குருதி ஆறாக பெருக்கெடுது நந்திக்கடலோடு சங்கமித்து ஒட்டுமொத்த தமிழர்களின் குரல்வளையும் நசுக்கப்பட்ட வலிகள் சுமந்த பேரவலத்தின் சாட்சியாய் நிற்கிறது முள்ளிவாய்க்கால் மண்.

இதன்போது ஒரு வேளை உணவுகூட இல்லாமல் முள்ளிவாய்க்காலில் பட்ட துயரங்களை எண்ணி நற்பிட்டிமுனை அம்பலத்தடிப்பிள்ளையார் ஆலயத்தில் கஞ்சி வழங்கி நினைவுகூர்ந்தனர்.

பெண்கள் ,குழந்தைகள் ,உட்பட பல்லாயிரக்கணக்கான கனவுகளோடு புதைக்கப்பட்ட இனப்பேரளிவை சந்தித்த
தமிழர் தாயக மண் இன்று அத்தனை வலிகளையும் சுமத்து நிற்கின்றது.

வலி சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உறவுகளை இழந்த மக்கள் தமிழர் தாயக பகுதிகளில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்து வருவதாக இராஜேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ,நற்பிட்டிமுனை,நாவிதன்வெளி, காரைதீவு,அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு,திருக்கோவில், போன்ற பகுதிகளில் பொதுமக்கள், அரசியல் தலைவர்களாலும்,தமிழ் இளைஞர்காளாலும் கோவில்களிலும்,தேவாலயங்களிலும் ,பொது இடங்கலிலும் நினைவுகூரப்பட்டு வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்