சைபர் தாக்குதல்-விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையிலுள்ள சில இணையத்தளங்கள்மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இணையத்தளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமான இணையத்தளங்களான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் இணையத்தளம் மற்றும் குவைத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உட்பட நாட்டின் பல இணையதளங்கள் மீது இந்த சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுள்ளன.

இதனால் மேற்படி இணையத்தளங்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் தற்பொழுது அவற்றுள் சில இணையத்தளங்களின் முடக்கம் சீர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் சில இணையதளங்களை மீளவும் இயங்கவைக்கும் செயற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த சைபர் தாக்குதல் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இணையத்தளங்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்