ஆரையம்பதியில் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு ஆரையம்பதி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரிநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உயிர்களின் ஆன்மா ஈடேற்றத்துக்காக விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, பஜனை வழிபாடுகளும் இடம்பெற்றன. தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலியுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்