அதிவேக வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு 8 பேர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியின் நுழைவாயில் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர்.

வான் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(சனிக்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது 47 வயதான ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்