மினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம்

வன்முறைச் சம்பவங்களினால் பாதிப்படைந்த கம்பஹா- மினுவாங்கொடயில் உள்ள பள்ளிவாசல்களில் நல்லிணக்க வெசாக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சர்வமதத் தலைவர்கள் மக்களுடன் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு வெசாக் வாரம் கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் பௌத்தர்களினால் நேற்று முதல்  வெசாக் வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதனைமுன்னிட்டு இலங்கை முழுவதும் என்றுமில்லாதவாறு வெசாக்கூடுகளும் பௌத்த கொடிகளும் தொங்கவிடப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. எனினும் மக்கள் கூட்டம் மகவும் குறைவாகவே காணப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலஙங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. அதன் பின்னர் இனங்களுக்கு இடையே முறுகல் நிலையேற்பட்டது. வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த 13ஆம் திகதி வன்முறைச்சம்பவங்கள் பதிவாகின.

முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டது. இவ்வாறான நிலையிலேயே இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு வெசாக் வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்