தாக்குதல்களுக்கு இலங்கையின் அரசியலமைப்பே காரணம்- தென்னிந்திய திருச்சபையின் பேராயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கையில் உள்ள அரசியலமைப்பே காரணம் என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டேனியல் செல்வரத்தினம் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள ஆயர் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பிரதமர் ஒரு கட்சியிலும் உள்ள நிலையில் இருவருக்கும் இடையில் புரிந்துணர்வு இல்லாமையே இவ்வாறான தாக்குதல் சம்பவத்திற்கு வலு சேர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலில் இருவருக்கும் இடையில் ஓர் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவங்களையடுத்து ஒரு சமூகத்தின் மீது பக்கச்சார்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்ககூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறித்த தாக்குதல்கள் இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான மோதலாக இதனை பார்க்க முடியாது. இஸ்லாமிய சமூகத்தினர் மீது வன்முறைகளை மேற்கொள்வதும் அவர்களை குற்றவாளிகளாக பார்ப்பதும் பொருத்தமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்