பணியாளருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத நிறுவனத்துக்கு அபராதம்!

வின்ட்சரில் பணியாளருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத உயர்தர நிறுவனமொன்றுக்கு 75,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வின்ட்சரில் அமைந்துள்ள லெமிங்டன் காளான் வளர்ப்பு நிறுவனத்திற்கே, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு மே மாதம் ஒரு தொழிலாளி ஒரு ஹைட்ராலிக் வென்ச் மற்றும் கேபிள்களைப் பயன்படுத்தும் போது நகரும் கேபிள் ஒன்றில் சிக்கினார்.

இதனையடுத்து, பணியாளருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இதன்பிறகு தொழிலாளர் அமைச்சகத்திற்கு இந்த விடயம் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதையடுத்து, தொழிலாளினைக் காப்பாற்றுவதற்கு எந்தவொரு பாதுகாவலர் அல்லது வேறு எந்த சாதனமும் இல்லை என கூறி குறித்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்