வெசாக்கூடுகளை காட்சிபடுத்த பொலிஸார் தடை – கூடுகளுக்கு தீ வைப்பு!

புத்தளம் – சாலியவெவ பிரதேசத்தில் இளைஞர் குழு ஒன்றினால் தயாரிக்கப்பட்டிருந்த வெசாக்கூடுகளை காட்சிபடுத்துவதற்கு பொலிஸார் அனுமதியளிக்காமையினால், வெசாக்கூடுகளை இளைஞர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

 

சாலியவெவ பிரதேசத்தில் நேற்று (சன்னிக்கிழமை) மாலை பௌத்த மற்றும் கத்தோலிக்க இளைஞர்கள் இணைந்து 500 வெசாக்கூடுகள் அடங்கிய தொகுதியொன்றை தயார் செய்திருந்தனர். அவற்றில் ஒருபுறம் பௌத்தர்களின் சின்னமும் மறுபுறம் கத்தோலிக்கர்களின் சிலுவை சின்னமும் பொறிக்கப்பட்டமையால் அங்கு முறுகல் நிலை  ஏற்பட்டது.

இதனையடுத்து குறித்த வெசாக்கூடுகளை காட்சிபடுத்துவதற்கு பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இளைஞர்கள், தாம் தயாரித்த வெசாக்கூடுகளை வீதியில் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்