தமிழ் இளைஞன் ஹோட்டலில் வைத்து கைது; ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பாம்?

பதுளை மாவட்டம் எல்ல பகுதியில் வைத்து கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தையை சேர்ந்த இளைஞர் ஒருவரே எல்ல பொலிஸாரால் எல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் கைபேசியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் தகவல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாக வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இளைஞரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்