திட்ட அமைச்சர்கள் என தெரிவித்து அமைச்சர்களுக்கு மாதாந்தம் ஒதுக்கப்படவுள்ளபெருந்தொகை நிதி!

மாதாந்த போக்குவரத்து செலவுப்படியாக ஐ.தே.கவைச் சேர்ந்த 46 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூபா இரண்டு இலட்சம் வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாக தெரிவிக்கும் அமைச்சர்களுக்கே இந்த கொடுப்பனவு வழங்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த நிதி கடந்த வருடம் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளளது.

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் ஸ்திரமற்ற நிலைமையயை அடுத்து இந்த மேலதிக கொடுப்பனவு வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது.

எனினும் இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அமைச்சர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்