அளவெட்டி ஞானவைரவர் வி.கழகத்துக்கு மாவையின் நிதியில் திறந்தவெளி அரங்கு! அடிக்கல் இன்று நாட்டிவைப்பு!

அளவெட்டி ஞானவைரவர் விளைஞாட்டுக் கழகத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கடசியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் நிதி ஒதுக்கீட்டில் திறந்தவெளி அரங்கிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

அளவெட்டி வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜின் வேண்டுகோளுக்கினங்க, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமையவே இந்த திறந்தவெளி அரங்கு அமைப்பதற்கான நிதி நாடாளுமன்ற உறுப்பினரால் ஒதுக்கப்பட்டுள்ளது.

அளவெட்டி ஞான வைரவர் விளையாட்டுக் கழகத்துக்கான திறந்தவெளி அரங்கு அமைப்பதற்காக முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாவை நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கியுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவும், தவிசாளர் சோ.சுகிர்தனும் அரங்கிற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்