கையில் எடுத்த சாப்பாட்டை உண்ண முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்ட விமல் வீரவன்ச..?

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னர் கையில் எடுத்த சாப்பைட்டைக்கூட உண்ண முடியாத அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஈஸ்டர் தின தாக்குதலை கேள்வியுற்ற சிலர் பாற்சோறு உண்டு மகிழ்ந்ததாக அமைச்சர் மங்கள சமரவீர கருத்துத் தெரவித்துள்ளார் அது தொடர்பில் உங்களது பதில் என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,

பொதுஜன பெரமுனவுக்கு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி நன்மை பெற விரும்பினால் இவ்வளவு காலம் கழியும் வரை காத்திருக்க வேண்டுமா?

எமக்கு அவ்வாறனதொரு எண்ணம் இருந்திருந்தால் பதில் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும். நாம் ஒருபோதும் அவ்வாறு அல்ல.

நாட்டு நிலைமையை அமைதிப்படுத்தவே மகிந்த ராஜபக்ச செயற்படுகின்றார். பாற்சோறு உண்பதற்கு அல்ல கையில் எடுத்த சாப்பாட்டைக் கூட எம்மால் உண்ண முடியாத அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.

ஏனென்றால் எம் அனைவரின் மனதையும் இந்த தாக்குதல் பாதித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்