வெசாக் தினத்தில் 12 சாராய போத்தல்களை வைத்திருந்த நபர் விளக்கமறியலில்!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வெசாக் போயா தினத்தில் 12 சாராய போத்தல்களை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டார்.

பிரதான வீதி, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் வெசாக் போயா பௌனமி தினத்தில் பன்னிரண்டு சாராய போத்தல்களை வைத்திருந்த நிலையிலே கந்தளாய் தலைமையக குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை 12 சாராய போத்தல்களுடன் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்