தாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

தாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

தாய்லாந்து- மியான்மர் எல்லை அருகே நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் முறையான ஆவணங்களின்றி நூற்றுக்கும் மேற்பட்ட மியான்மர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல், தாய்லாந்து- கம்போடிய எல்லைக்கு அருகில் நடந்த தேடுதல் வேட்டையில் 80 கம்போடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மியான்மர் தொழிலாளர்கள் கைது

கடந்த மே16 அன்று, தாய்லாந்து- மியான்மர் எல்லையில் உள்ள டக்(Tak) மாகாணத்தில் அதிகாலையில் நடத்தப்பட்ட திடீர் தேடுதல் வேட்டையில், சட்டவிரோதமாக தாய்லாந்தில் பணியாற்றி வந்த மியான்மர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேடுதல் வேட்டையில், தாய்லாந்து குடிவரவுத்துறை, காவல்துறை, ராணுவம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஈடுபட்டிருக்கின்றது. கைது செய்யப்பட்ட மியான்மர் தொழிலாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள இடம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கான தொண்டு ஊழியர்,“குடிவரவுச்சட்டத்தின் படி அவர்கள் தாய்லாந்துக்குள் நுழைய 2 ஆண்டுகள் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியிருக்கிறார்.

தாய்லாந்து மற்றும் மியான்மர் இடையே உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், மாதந்தோறும் 18,000 மியான்மர் தொழிலாளர்கள் தாய்லாந்தின் டக் மாகாணத்தில் உள்ல மே சோட்(Mae Sot) பகுதி வழியாக தாய்லாந்துக்குள் நுழைக்கின்றனர். இதற்கு அப்பால், பல மியான்மர் தொழிலாளர்கள் இருநாட்டுக்கும் இடையில் உள்ள ஆற்றை கடந்து சட்டவிரோதமாக தாய்லாந்தில் பணியாற்றுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.

கம்போடிய தொழிலாளர்கள் கைது

கடந்த மே 15 அன்று, தாய்லாந்து- கம்போடியா எல்லைக்கு அருகில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் வனப்பகுதியில் மறைந்திருந்த 80 கம்போடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கம்போடியாவின் பண்டேய் மெயின்சே (Banteay Meanchey) மாகாணத்திலிருந்து தாய்லாந்தின் சசோஎங்சோ (Chachoengsao) மாகாணத்திற்குள் சட்டவிரோத நுழைந்திருக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்