கல்முனை மாநகரில் – தமிழ் சிங்கள மக்களின் ஏற்பாட்டில் களைகட்டிய வெசாக் நிகழ்வுகள்!

கல்முனை மாநகரில் இம்முறை வெசாக் நிகழ்வுகள் தமிழ் சிங்கள மக்களினால் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. கல்முனை தமிழ் மக்கள் மன்றம், கல்முனை ஸ்ரீ சுபத்திரராமய விகாரையுடன் இணைந்து இந்த வெசாக் நிகழ்வுகளை செய்திருந்தனர்.

கல்முனை மாநகரத்தில் வெசாக் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் தாகசாந்தி நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் கல்முனை ஸ்ரீ சுபத்திரராமய விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர். கல்முனை பொலிஸ் அதிகாரிகளான S.P எச்.எம்.பி.ஏ ஹேரத், HQI ஜே.கே.எஸ்.கே ஜெயநிதி மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்