25 ஆம் திகதியின் பின்னர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்..!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறைச்சாலையில் உள்ள ஞானசார தேரரை பார்க்கச்சென்றமை அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் முன்னேற்றமாக அமைந்துள்ளதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

பொது பல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடி இருந்தார்.

ஞானசார தேரரை விடுதலை செய்வது குறித்து ஒரு வார்த்தையும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இருப்பினும், இம்மாதம் 25 ஆம் திகதியின் பின்னர் நாடு முழுவதும் இதற்கான ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக் கூட்டங்கள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்