பயங்கரவாதிகளில் 95 வீதமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: சபாநாயகர்

தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 95 வீதமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நாட்டு மக்களும் வதந்திகளை நம்பி ஏமாறாமல் வெசாக் கொண்டாட்டங்களை சிறப்பாக கொண்டாடியமை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று ஏனைய நாட்களிலும் தங்களின் செயற்பாடுகளை எந்ததொரு தயக்கமும் இன்றி மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்