ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: அவசரமாக இன்று நடக்கவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆராய இன்று திங்கட்கிழமை அவசரமாகக் கூடுகின்றனர் கட்சித் தலைவர்கள்.

ஏற்கனவே நாளை செவ்வாய்க்கிழமை காலையில்தான் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருந்தது. எனினும், நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பொது எதிரணி உறுப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எப்போது விவாதிப்பது என்று முடிவு செய்யப்படவுள்ளது.

அதேவேளை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, மே 17ஆம் திகதி சபாநாயகரின் உத்தரவுக்கு அமைய, நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று பொது எதிரணியின் சில தலைவர்கள் கோரியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்