அதியுயர் சபைக்குள்ளும் சஹ்ரான் குழு ஊடுருவல்! – நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டு, தற்போது தடை செய்யப்பட்டுள்ள, தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராஜகிரியவில் உள்ள அவரது வதிவிடத்தில் வைத்து, இவரை குருணாகல் பொலிஸார் நேற்றுக் கைதுசெய்தனர்.

சந்தேகநபருக்கு தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புடன் உள்ள தொடர்புகள் குறித்து சபாநாயகருக்கு அறிவித்த பின்னர், பொலிஸார் அவரைக் கைதுசெய்தனர்.

சந்தேகநபர், 2006ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பணியாளராக இணைந்துகொண்டார்.

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தீவிர செயற்பாட்டு உறுப்பினரான, இவர், அதன் தலைவர் சஹ்ரான் ஹாசீமின் நெருங்கிய சகாக்களில் ஒருவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் சந்தேகநபர் சில நாட்கள் மாத்திரமே பணிக்கு வந்துள்ளார்.

குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் தேசிய தௌஹீத் ஜமா அத் உறுப்பினர் ஒருவரைக் கைதுசெய்ததை அடுத்தே, நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் பற்றிய தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமா அத் உறுப்பினர்கள் இரகசியமாக அக்குரணவில் கூட்டங்களை நடத்தி வந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்