சு.க.வின் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானம்?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினைத் தொடர்ந்து அவர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குறித்த முக்கியஸ்தர்கள் விரைவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தமது ஆதரவை தெரிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதுகுறித்து அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடனேயே இவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்