முஸ்லிம் பெண்களை சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என கோரிக்கை!

பொது இடங்களில் முஸ்லிம் பெண்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் என்.டி. உடகமவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்க்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்களின் கலாசார உடையான ஹிஜாப்பிற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

எனினும், ஹிஜாப் அணிந்து வருகின்ற முஸ்லிம் பெண்கள் பலர் பொது இடங்களுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டு சிரமத்துக்கு உள்ளாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவை மனித உரிமை மீறல்களாகும்’ என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்