அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.

சபாநாயகரிடம் நாளை(செவ்வாய்கிழமை) இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக முன்கூட்டியே தகவல் கிடைத்தும் அரசாங்கத்தினால் அதனை முறியடிக்க முடியிவில்லை.

அத்துடன் நாட்டில் இடம்பெறும் அடிப்படைவாத செயற்பாடுகளை தடுப்பதற்கான இயலுமையும் அரசாங்கத்திடம் இல்லை.

இந்தநிலையில் குறித்த காரணங்களை முன்வைத்தே ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா  தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதிகளுடன் தொடர்பினை பேணி வந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் ரிசாட்டிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்