சைபர் தாக்குதல் -அரச மற்றும் தனியார் இணைய உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தல்!

சைபர் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்க மற்றும் தனியார் துறை இணையத் தள உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை கணனிஅவசர பதிலளிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிது மீகாஸ்முல்ல இதுதொடர்பாக தெரிவிக்கையில், சில இணையத்தள உரிமையாளர்கள் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

நேற்றைய தினம் சைபர் தாக்குதலுக்கு உள்ளான டொட் கொம் மற்றும் டொட் எல்.கே ஆகிய இணையத்தள முகவரி பரப்புகளை கொண்ட பல இணையத்தளங்கள் வழமை நிலைக்கு திரும்பியருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களின் இணையத்தளங்களில் நேற்றுமுன்தினம் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

டொட் கொம் மற்றும் டொட் எல்.கே ஆகிய இணையத்தள முகவரி பரப்புகளை கொண்ட பல இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானநிலையிலேயே தற்போது அரசாங்க மற்றும் தனியார் துறை இணையத் தள உரிமையாளர்களுக்கு சைபர் தாக்குதல் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்