யாழில் சாயீசன் ரவல்ஸ் இன்று திறந்து வைப்பு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் உதவிகள்!

இல 220, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இன்று கனடாவைச் சேர்ந்த குணபாலன்  நிஷந்தனின் முயற்சியால் கனடா சாயீசன் பணப்பரிமாற்ற நிறுவனத்தின் கிளை நிறுவனமான ‘சாயீசன் ரவல்ஸ்’ என்னும் நிறுவனத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசாவால் திறந்துவைக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கிணங்கவும், தமிழ் சி.என்.என். இன் நிர்வாக இயக்குநரும், உலக பசி ஒழிப்பு மன்றத்தின் நிறுவுநருமான கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, தமிழ் விருட்சத்தின் நிர்வாகப் பணிப்பாளர் சந்திரகுமார் கண்ணன் ஆகியோரின் சிபாரிசுக்கமைய பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள், வறிய மாணவர்கள் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்குரிய உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டன.

தென்மராட்சி, வலிகாமம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களிலிருந்து 25 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு மிக்கசர் தயாரிக்கும் இயந்திரங்கள், பொதியிடல் இயந்திரம் மற்றும் மிக்சர் தயாரிக்கும் பொருள்களும், 40 வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா வீதம் காசோலைகளும், 50 வறிய மாணவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் தமிழ் சி.என்.என். இன் நிர்வாக இயக்குநரும் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சோ.கலையமுதன், தமிழ் விருட்சத்தின் நிர்வாகப் பணிப்பாளர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்