வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

வவுனியா, கற்குழிப்பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் புலனாய்வுப்பிரிவும் போதை ஒழிப்புப்பிரிவும் ஈடுபட்டன.

இதன்போதே 510 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23வயது இளைஞனை அவர்கள் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்