ரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன: விஸ்ணுகாந்தன்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் பாதுகாப்பாக கடத்தப்பட்டிருக்கின்றதென இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நா.விஸ்ணுகாந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கடந்த காலங்களில் வடக்கின் பல பகுதிகளில் பல்வேறு குடியேற்றங்களையும் பள்ளிவாசல்களையும் ரிசாட் அமைத்துக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அத்தகைய குடியேற்ற பகுதிகளில் இருந்தும் பள்ளிவாசல்களிலும் இருந்துமே வெடிபொருட்கள் கைப்பற்றப்படுகின்றன.

இவ்வாறு வெடிபொருட்கள் கொண்டு வருவதானது இலகுவான காரியமல்ல. இவை பாதுகாப்பான முறையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளன.

அந்தவகையில் ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களே அவருடைய வாகனத்தின் ஊடாக  இந்த ஆயுதங்களை கடத்தியிருக்க வேண்டும்.

ஆகவே இவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என நா.விஸ்ணுகாந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்