ஐ.எஸ்.இயக்கத்தின் யுத்த பயிற்சி இறுவெட்டுக்களுடன் ஒருவர் கைது

ஐ.எஸ் இயக்கத்தின் யுத்த பயிற்சி இறுவெட்டுக்கள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை திருகோணமலை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை, ஜமாலியா பகுதியைச் சேர்ந்த இப்ராஹீம் ஷா மஹ்ரூப் (55 வயது) என்பவரே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வீட்டை திடீர் சோதனைக்கு  நேற்று உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது இரண்டு இறுவெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுடன் அதில் ஐ.எஸ் இயக்கத்தின் யுத்த பயிற்சி காணொளி காணப்படுவதாகவும்  புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபரிடம் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்