சரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை

சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணத்தில் 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமது கோரிக்கை அடங்கிய ஆவணத்தை ஒப்படைக்க ஜனாதிபதியிடம் நேரம் கோரியபோதும், ஜனாதிபதி நேரம் ஒதுக்கவில்லை என்பதால் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதி வந்தபோது அவரிடம் இந்த ஆவணத்தை சமர்ப்பித்ததாக அவர் மேலும் கூறினார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் கோரிக்கையை, தொடர்ச்சியாக ஜனாதிபதி நிராகரித்து வருகின்ற நிலையில், கையெழுத்திட்ட ஆவணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்