ஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஐக்கிய தேசிய முன்னணி தலமையிலான அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தகவல்கள், தாக்குதலுக்கு முன்னதாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அதுகுறித்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க அரசாங்கத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் முடியாமல் போயுள்ளமையை சுட்டிக்காட்டிய இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

எனவே இந்த அரசாங்கம் தொடர வேண்டுமா அல்லது வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டுமா எனபது நாடாளுமன்றம் தீர்மானிக்கப்பட்டும் என்றும் தெரிவித்தார். எனவே இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்திருந்தால் அடுத்த தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

அந்தவகையில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை (செவ்வாய்க்கிழமை) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு சகல கட்சிகளினதும் ஆதரவை கோரியிருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்