கிழக்கில் தமிழ் மாணவர்களின் கல்வியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியை கண்டித்து , தீர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

கடந்த சில தினங்களாக கிழக்கில் தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றும் வேலைத்திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுனர் M.L.A.M ஹிஸ்புல்லா அவர்கள் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் அவர்களும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதனைக் கண்டித்து இன்று (20.05.2019) திங்கட்கிழமை முற்போக்குத் தமிழர் அமைப்பினர் கண்டனப் பேரணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர்! இதன் போது கருத்து தெரிவித்த முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் , பாராளுமன்றம் உறுப்பினருமான வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில், இங்கு கவனத்தில் கொள்ளப்படாத விடயங்கள்.

1) இன்னும் இரண்டரை மாதங்களில் கா.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கும், புலமைப்பரிசில் பரீட்சைக்கும் மாணவர்கள் தோற்ற இருப்பதை கவனத்தில் கொள்ளாமை.

2) பதில் ஆளின்றி ஆசிரியரை விடுவிக்க முடியாது என்கின்ற நிபந்தனை இருந்தும் விடுவித்தமை.

3) பாடசாலைகளில் உள்ள ஆசிரியரை விடுவிப்பதாக இருந்தால் உரிய பாடசாலையின் அதிபரின் சிபாரிசுபெறப்பட வேண்டும் அது பெறப்படவில்லை.

4) வலயக்கல்விப் பணிப்பாளரின் அனுமதியும் பெறப்படவில்லை.

(5) முஸ்லிம் ஆசிரியர்களை முஸ்லிம்; பாடசாலைகளுக்கு இடம் மாற்றுவதில் பிரச்சினையில்லை . ஆனால் இடமாற்ற முன்பு அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரை அழைத்து பேசியிருக்க வேண்டும்.அதுவும் பின்பற்றப்படவில்லை. பதில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக எந்த தீர்மானம் மேற்கொள்ளாமல் கிழக்கில் தமிழ் பாடசாலைகளில் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் போதும் மாணவர்களுக்கான A/L, புலைமைப்பரிசில் பரீட்சை நெருங்கும் போதும் முஸ்லிம்; ஆசிரியர்களுக்கு தமிழ் பாடசாலைகளில் எந்த பிரச்சினையும் இல்லாத போதும் முஸ்லிம் ஆசிரியர்களின் இடமாற்றித்திற்கு ஆளுனர் அனுமதி வழங்கியது ஒட்டு மொத்த ஒரு பக்க பார்வையையே காட்டுகின்றது.

தமிழ் மாணவர்களின் கல்வியை சற்றேனும் ஒரு பொருட்டாக கவனத்தில் கொள்ளாமையே காட்டுகின்றது. இந்நிலையில் எமது கோரிக்கைகள்;

1) உடனடியாக கிழக்கில் முஸ்லிம்; பாடசாலைகளில் வேலை செய்யும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ்ப்பாடசாலைக்கு இட மாற்றம் செய்யப்பட வேண்டும். அத்தகைய இடமாற்றம் நிரந்தரமாக இருக்க வேண்டும்.

2) கடந்த காலங்களில் எமது தமிழ் கல்வி வலயங்களில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களை காட்டி நியமனத்தை பெற்ற பின் அரசியல் செல்வாக்கில் தங்கள் பகுதிக்கு இடமாற்றம் பெற்று செல்லும் நிலை நிலவியது இதனால் பாதிக்கப்பட்டது எமது தமிழ் மாணவர்களே! ஆகவே அத்தகைய நிலை தொடராமல் இருக்க தமிழ் பாடசாலைகளுக்கு அப்பகுதியை சேர்ந்த தகைமையுள்ள தமிழர்கள் ஆசிரியராக நியமிக்கப்பட வேண்டும்.

3) இப்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையே நிவர்த்தி செய்ய வேலையற்ற தமிழ் பட்டதாரிகள், தமிழ் தொண்டர் ஆசிரியர்கள் காலம் தாழ்த்தப்படாமல் தமிழ் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட வேண்டுமெனக் கூறி, தீர்வு கிட்டும் வரை இவ்விடயத்தை ஜனாதிபதி முதல் அனைத்து தரப்புக்கும் கொண்டு செல்வதாகக் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்