உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் -இதுவரை 89 பேர் கைது!

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

கைது செய்யப்பட்ட 89 பேரில் 69 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலும், மேலும் 20 பேர் பயங்கரவாத விசாரணை பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்