எனக்கு எதிரான பிரேரணையை எதிர்க்கவேண்டும் கூட்டமைப்பு! – சம்பந்தனிடம் ரிஷாத் வேண்டுகோள்

தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்று தொலைபேசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசியுள்ளார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

இதன்போது, நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும் என அவர் கோரியுள்ளார்

இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன் எம்.பி., “நான் இப்போது திருகோணமலையில் தங்கியுள்ளேன். கொழும்பு வந்ததும் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது பற்றிப் பேசவுள்ளேன். அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி அதன் பின்னர் பிரேரணை தொடர்பில் ஒரு முடிவை எடுப்போம். அதன்பின்னர் உங்களுடன் நான் பேசுகின்றேன்” – என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்களின்படி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக – அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அக்கட்சி எடுக்கும் என அறியமுடிந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்