அதிகார ஆசைக்காகவே தேசப்பற்றை கையிலெடுக்கின்றனர்: சஜித்

சிலர் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ளும் ஆசையில் தேசப்பற்றை அதற்காக பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முனைகின்றனரென வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கலலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாஸ இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தேசப்பற்றுள்ளபவர்களாக காட்டிக்கொள்பவர்கள்தான் மக்களிடத்தில் இன, மத பேதங்களை ஏற்படுத்துபவர்களாக உள்ளனர்.

மேலும் இவர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குழைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.

இதில் ஒரு சிலர், அதிகார ஆசைக்காக ஒரு இனத்தவரின் சொத்துக்களை சேதப்படுத்தி சமய மேம்பாட்டையும் முடக்குகின்றனர்.

இதேவேளை பௌத்த மதத்தை மேன்மைபடுத்தி பேசவில்லை மாறாக நடைமுறைக்கு சாத்தியமான பௌத்த சாசனத்தை பாதுகாக்கவே நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்” என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்