பூநகரி பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் சிறீதரன் எம்.பி

பூநகரி பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் நவீன முறையிலான கள் விற்பனை நிலையத்திற்கான அடிக்கல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரின் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் அமையப்படவுள்ளது.
குறித்த நிகழ்வு பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது பாராளுமன்ற உறுப்பினருடன் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஐயம்பிள்ளை, பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன், பூநகரி பிரதேச சபை செயலாளர் கம்சநாதன், உப தவிசாளர் சி.சிறிரஞ்சன், பச்சிலைப்பள்ளி தவிசாளர் சு.சுரேன், பச்சிலைப்பள்ளி உப தவிசாளர் திரு.மு.கஜன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் யோக.தனராஜ், முழங்காவில் பிரதேச அமைப்பாளர் த.குவேந்தின், உதவி ஆணையாளரின் கணக்காய்வாளர், மட்டுவில் நாடு கிராம அலுவலர், பூநகரி பனை தென்னை வள அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பனை தென்னை அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்