கிளிநொச்சியில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வு

கிளிநொச்சி படைகளின் கட்டளையகத்தின் 57 வது படைப்பிரிவும், தேசிய பாரம்பரியங்களை பாதுகாக்கும் மகா சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த வெசாக் தின நிகழ்வு 19,20 கிளிநாச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தர்மபுரம் விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற குறித்த வெசாக் நிகழ்வினை கிளிநொச்சி படைகின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சவிப்பிரிய ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது வெசாக் கூடுகள் மைதானத்தை அலங்கரித்தன. தொடர்ந்து வெசாக் பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டன. இதன்போது வருகைதரும் மக்களிற்கு அன்னதானமும் இடம்பெற்றதுடன் பாடசாலை மாணவர்களின்க வங்கி கணக்குகளும், பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மக்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்