மாஓயாவுக்கு அருகில் 1,475 சிம் அட்டைகள் மீட்பு

நீர்கொழும்பு – கொச்சிக்கடை, ஓவிட்டியாவ மாஓயாவுக்கு அருகிலிருந்து 1,475 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான குறித்த சிம் அட்டைகள் உரப்பை ஒன்றுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்