வவுனியா ஆலயங்களில் 8.45 மணிக்கு ஒலித்த மணியோசையும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்

இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக வவுனியாவிலுள்ள பெரும்பாலான சமய வழிபாட்டுத் தலங்களில் இன்று (21.05) காலை 8:45 மணியளவில் மணியோசை ஒலிக்க செய்யப்பட்டதுடன் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

அந்தவகையில் வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் தேவஸ்தானத்தில் ஆலய பிரதம குரு கமலேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய மணி ஒலிக்கவிடப்பட்டு விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றதுடன், காயமடைந்தவர்கள் குணமடைய மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் 31 ஆம் நாள் பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக 21ஆம் திகதி வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன், ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் விடுத்த கோரிக்கையினையடுத்தே இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்