உயிரிழந்தவர்களுக்கு இ.போ.சபை வவுனியா சாலையில் அஞ்சலி நிகழ்வு

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இலங்கை பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா இ.போ.சபை சாலையில் இன்று (21.05) காலை 9.15 மணியளவில் இடம்பெற்றது.

உயிரிழந்தவர்களின் ஒரு மாத பூர்த்தியை முன்னிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சாலை முகாமையாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சாரதிகள், நடத்துனர்கள் ஆகியோர் மெழுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர் இதன்போது இறந்தவர்கள் நினைவான இரங்கல் உரைகளும் இடம்பெற்றன.

இவ் அஞ்சலி நிகழ்வில் இ.போ.ச வவுனியா சாலையின் முகாமையாளர், உப முகாமையாளர், கணக்காளர், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், சாரதிகள், நடத்துனர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்