தாக்குதலில் பலியானவர்களுக்கு சாவகச்சேரியில் அஞ்சலி!

கடந்த மாதம் 21 ஆம் திததி உயிர்த்தஞாயிறு  திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் பலியான மக்களுக்கான சர்வமத ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் இன்று காலை சாவகச்சேரி நகரத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 8.45 மணிக்கு சாவகச்சேரி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்ட விசேட நினைவஞ்சலி அரங்கில் சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சாவகச்சேரி வீரபத்திரர் ஆலய பிரதம குருக்கள், சாவகச்சேரி லிகோரியார் தேவாலய பங்குத்தந்தை, சாவகச்சேரி ஜும்மா பள்ளிவாசல் மௌலவி, நாவற்குழி விகாரையின் விகாராதிபதி ஆகியோர் ஒன்றாக  மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தி சர்வமத பிரார்த்தனைகளை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது சாவகச்சேரி நகராட்சி மன்றநகரபிதா திருமதி சிவமங்கை இராமநாதன், உப நகரபிதா பாலமயூரன், ”புதிய சுதந்திரன்” பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி, சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் பௌலினா சுபோதினி, சாவகச்சேரி பிரதேச சபை உப தலைவர் செ.மயூரன், மற்றும் சாவகச்சேரி வணிகர் கழக தலைவர் சிவபாலன், நகர வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் என பலரும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனைத்தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்