தலைநகர் பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் நேரில் ஆய்வு

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவரின் இக்கண்காணிப்பு விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தத்தமது தேர்தல் தொகுதிகளிலுள்ள பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து ஆராயுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். அதன் ஒரு அங்கமாகவே எதிர்க்கட்சியின் இவ்விஜயம் அமைந்துள்ளது.

அதன்படி, தலைநகரிலுள்ள சில பாடசாலைகளுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சி தலைவர் அங்கு மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோருடன் பாதுகாப்பு நிலைமை குறித்து கலந்துரையாடினார்.

எதிர்க்கட்சி தலைவரின் குறித்த கண்காணிப்பு விஜயத்தில் அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, கனக ஹேரத், எதிர்க்கட்சி தலைவரின் செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் உடன்சென்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்