குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு சுதந்திர சதுக்கத்தில் அஞ்சலி

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுதந்திர சதுக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடிய மக்கள் அங்குள்ள தடாகத்தில் மலர்களை தூவி, மெழுகுவர்த்தி ஏற்றினர். அதன் பின்னர், இறந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி ஒரு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

குறித்த தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒருமாதம் பூர்த்தியடையும் நிலையில், நாடளாவிய ரீதியில் விசேட அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்