அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கைளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தகவல்கள், தாக்குதலுக்கு முன்னதாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அதுகுறித்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியது.

அதன்படி, மக்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க அரசாங்கத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் முடியாமல் போயுள்ளமையை சுட்டிக்காட்டி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க அரசாங்கத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் முடியாமல் போயுள்ளதை சுட்டிக்காட்டி இந்நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்