கத்தி இடைவேளை காட்சி சும்மா பட்டையை கிளப்பிட்டாரு தளபதி! முன்னணி நடிகர் ஓபன் டாக்

அஜித், விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். இவர்கள் நடிப்பில் எந்த படம் வந்தாலும் எப்போதும் வசூல் சாதனை செய்யும்.

அந்த வகையில் இவர்களின் ஆரம்பக்காலத்தில் பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா, இவர் இயக்கிய வாலி, குஷி இரண்டுமே மெகா ஹிட் ஆனது.

இந்நிலையில் இவர் நடிப்பில் வந்த மான்ஸ்டர் செம்ம வரவேற்பு பெற, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி சொன்னார்.

அப்போது அவரிடம் விஜய், அஜித் இவர்களில் யார் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறுவார்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘விஜய், அஜித் யார் வந்தாலும், கண்டிப்பாக ஏதாவது பெரியளவில் வெற்றி பெறுவார்கள், ஏனெனில் இருவருமே நினைத்த வேலையை முடிக்கும் திறமை கொண்டவர்கள்’ என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒரு சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் உங்களுக்கு பிடித்த விஜய் படக்காட்சி எது என்று கேட்க, ‘கத்தி இடைவேளை காட்சி, சும்மா பட்டையை கிளப்பிட்டாரு’ என்று புகழ்ந்து தள்ளினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்