ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21ஆம் திகதி) நிராகரித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் சர்மிளா கோனவலவினால் யாதுரிமை எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரணைக்குக்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்காது மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சர்மிளா கோனவலவினால் பிரதிவாதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இவ்வாறான யாதுரிமை எழுத்தாணை மனுவை தாக்கல் செய்வதற்கான அதிகாரம் இல்லை என, நீதிமன்றம் அறிவித்திருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்