ஷங்கிரி-லா குண்டுதாரி சஹ்ரான்; மரபணுப் பரிசோதனையில் உறுதி!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமா – அத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் காசீம்தான் என மரபணுப் பரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளது.

சஹ்ரானின் மனைவி, மகள், சகோதரி ஆகியோரின் உயிரியல் மாதிரிகளைக் கொண்டு, கடந்த சில தினங்களாகவே மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையின்போதே, இந்த விடயம் உறுதியாகியுள்ளது என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்