தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி அஞ்சலி நிகழ்வு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 21.05.2019 அன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி 21.05.2019 அன்று மாலை 4 மணிக்கு கொட்டகலை பத்தனை நுரூல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசலில் தலைவர் பசூர் மொஹமட் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நுரூல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி கூட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு விசேட பிராத்தனைகளில் ஈடுப்பட்ட பின் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்